பட்டதாரி இளைஞருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்து மிரட்டிய திமுக வட்டச்செயலாளர், அவரது மகன் குறித்த மிரட்டல் ஆடியோ வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள சின்னசேலத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற இளைஞர் படித்து விட்டுச் சென்னையில் தங்கி வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில் திமுக வட்டச் செயலாளர் கண்ணன் என்பவர் அறிமுகமாகி அவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவரிடமிருந்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் வாங்கி உள்ளார். வேலை வாங்கித் தராததால் மூர்த்தி பணத்தைத் திருப்பி கேட்டதற்கு திமுக வட்டச் செயலாளர் கண்ணனும் அவரது மகன்கள் கவித்திறன், விஜயவர்த்தன் ஆகிய மூவரும் அவரைக் கடுமையாகத் தாக்கியதோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணன், கவித்திறன் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். விஜயவர்த்தனைத் தேடி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர் மூர்த்திக்குத் திமுக வட்டச் செயலாளர் கண்ணனின் மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.