கல்யாண ராணியிடம் ஏமாந்த திமுக-காரர் !! ”நான் அவன் இல்லை” என மறுக்கும் முகமது ரபீக் !

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் 58 வயதான முதியவர் முகமது ரபீக். செழிப்பான செல்வந்தர், தொழிலதிபர், மீரா ஹோட்டலின் உரிமையாளர், திமுக-வின் சிறுபான்மை நலன் அமைப்பாளர் என வலம் வருபவர். இவரது மனைவி கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்துவிட, அந்த ஏக்கத்திலேயே இருந்து வந்தார் முகமது ரபீக். இவரது இரண்டு மகன்கள் திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில், இவர் கம்பத்தில் தனியாக வசித்து வருகிறார்.வெளியில் வெள்ளைச்சட்டையுடன் புனிதர் வேடம் போட்டுக் கொண்டிருந்த முகமது ரபீக், நிழல் உலகில் காமன் மகனாக வலம் வந்திருக்கிறார். தன் மனைவி இருக்கும் போதே சின்னமனூரைச் சேர்ந்த ஜீவா மற்றும் கோடாங்கிபட்டியைச் சேர்ந்த சத்யா ஆகிய இருவரிடமும் திருமணம் தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் முகமது ரபீக்கிற்கு திருமணம் ஏக்கம் வந்திருக்கிறது, அதை ஜீவாவிடமும், சத்யாவிடமும் தெரிவித்துள்ளார். அவர்களும் மேனகா என்ற பெண்ணை, அவரிடம் போனில் அறிமுகப்படுத்தியுள்ளனர். மேனகாவின் போட்டோவை பார்த்து அவரது அழகில் மயங்கிய முகமது ரபீக்கின் மனமெல்லாம் துள்ளல் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டது.  மணிக்கணக்கில் போனில் பேசுவது, வீடியோ காலில் அங்கலாய்ப்பது என ஜாமய்திருக்கிறார் முகம்மது ரபீக்

எத்தனை நாள் போனிலேயே அங்கலாய்ப்பது, ரெசாட்டில் தனிமையில் இருக்கலாம் என இருவரும் சேர்ந்தே ஒரு நாளை குறித்தனர். இதற்கிடையில் அன்யோன்மயமாக பேச்சுகள் தொடர்ந்தன. இது போன்ற பேச்சுகள் தொடர்ந்த நிலையில் தான், மேனகாவின் ஆசை வார்த்தைகளால் தூண்டப்பட்ட ரபீக், தனக்கு வயதாகவிட்டாலும், எல்லா பெண்களையும் மயக்கும் அழகன் என்ற முடிவிற்கு வந்துள்ளார். இதற்கிடையில் வெளிநாட்டிற்கு மேனகாவுடன் சுற்றுலா சென்று, ஜோடியாக ஸ்கை டைவிங்க செய்து மகிழலாம் என்றெல்லாம் பிளான் செய்துள்ளார் முதியவர் முகமது ரபீக்.. இருவரும் ரெசாட்டில் தனிமையில் இருக்கும் நாளை எதிர்பார்த்து கொண்டிருந்த போதுதான், ஒரு நாள் முகம்மது ரபீக்கிடம் கண்ணீருடன் பேசினார் மேனகா. தனக்கு கடன் தொல்லை இருப்பதகாவும், அதை தீர்த்துவிட்டால் நான் ப்ரியாகிவிடுவேன் எனவும் கூறியுள்ளார்.

அளவிக்கு மீறிய மோகத்தில் இருந்த முதியவர் முகம்மது ரபீக், பணத்தை தர ஒப்புக் கொண்டார். ஆனால் முன்னதாகவே பணம் வேண்டும் என நாசுக்காக நச்சரித்தார் மேனகா. இதில் மனம் உருகிய முகம்மது கடந்த மாதம் 2ம் தேதி மேனகாவின் வங்கி கணக்கிற்கு 50,000 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தார். அதற்கடுத்து இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் பேசினார் மேனகா, போதைப் பேச்சு, கண்ணீர் பேச்சு, என மேனகா விதவிதமான மயக்கும் வார்த்தைகளால் முகமது ரபீக்கை கட்டிப்போட்டு, மறுபடியும் 10 லட்சம் ரூபாயை கறந்தார். பணத்தை கறந்த உடனே, மேனகா, ஜீவா, சத்யா என மூவருமே தலைமறைவாகிவிட்டனர். ரெசாட்டில் தனிமையில் இருக்கும் அந்த நாள் வந்தபோது போன் செய்து பார்த்த முகம்மது ரபீக்கிற்கு ஏமாற்றமாகிவிட்டது. அதன் பிறகுதான் அவர்கள் தலைமறைவாகிவிட்டார்கள் என்பதே அவருக்கு தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமின்றி கல்யாண ராணியான மேனகா ஏற்கனவே கணபதி சில்கஸ் ஓனரை ஏமாற்றி திருமணம் செய்து அவரை கதறவிட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதெல்லாம் தெரிந்த பின் தான் காவல்நிலையத்தை அணுகி நடந்தவற்றை கூறி புகார் தெரிவித்தார் முகம்மது ரபீக்.

காவல்துறையினரும், பணத்தை ஏமாற்றிய மூன்று பெண்களை தேடிவருகின்றனர். இதற்கிடையில் இவர்களின் ஆடியோ பேச்சுகள் சமூகவலைதளங்களில் வெளியாகி சக்கைபோடு போட ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்த ஆடியோவில் உள்ள பேச்சுகள் என்னுடையது இல்லை என மறுத்திருக்கிறார் திமுகவின் சிறுபான்மை அமைப்பாளர் முகம்மது ரபீக். ”இந்த திமுக காரங்களே இப்டிதான்பா, வெளில வெள்ளையும் சொல்லையுமா சுத்துவாங்க, உள்ளுக்குள்ள பெண் மோகத்துல இருப்பாங்க” எனக் கூறி நெட்டிசன்கள் நக்கல் செய்து வருகிறார்கள்.

Exit mobile version