மலைஜாதியா பழங்குடியா? அரசு விண்ணப்பத்தில் இப்படியா சாதி கேட்பது?

சென்னையிலுள்ள 32 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளிலும், பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்கான படிவத்தை நேற்று (ஜூன்.14) காலை முதல் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் வழங்கிவந்தனர்.

அந்தப் படிவத்தில் சாதி அடிப்படையான கேள்வியில் தாழ்த்தப்பட்டோர், மலை சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என கேட்டு அவற்றுக்கு பதிலளிக்கும்படி அமைக்கப்பட்டிருந்தது.

இது சமூக ஆர்வலர்கள் அமற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. “சாதிய வெளிப்படைத்தன்மை” என்பதில் அரசுக்கு இருக்கும் புரிதலின்மை சாதியின் பெயரை வெளிப்படையாகக் கேட்க வைத்துள்ளது. 

சாதி ஒழிப்பையும், தீண்டாமை அழிப்பையும் தன் கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளதாகப் பறைசாற்றிக்கொள்ளும் திமுக ஆட்சியின் உண்மையான சாதியமுகத்தை காட்டுவதாக இந்த நடவடிக்கை இருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். 

Exit mobile version