சென்னை மேற்கு மாம்பலம் ஜூப்ளி சாலையை சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் திமுக தியாகராயநகர் பகுதி 134வது வட்ட செயலாளர் சக்திவேல் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். அலுவலகப் பணி காரணமாக பெங்களூரிலேயே தங்கி பணிபுரிந்து வந்த பாலாஜி, தனது பொருளாதார தேவைக்காக வீட்டினை கடந்த 2021 ஆம் ஆண்டு 15 லட்சம் ரூபாய்க்கு லீசுக்கு விடுவதற்காக முயற்சித்துள்ளார். அப்போது தானே லீசுக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்த சக்திவேல் பணத்தை முழுமையாக கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.
இதனையடுத்து, வீட்டை விற்பனை செய்ய பாலாஜி முடிவெடுத்த நிலையில், தானே லோன் போட்டு வாங்கிக் கொள்வதாகக் கூறியுள்ளார் சக்திவேல். அதற்கும் பாலாஜி சம்மதித்த நிலையில் ஓராண்டாக வீட்டை வாங்காமலும் இழுத்தடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதே குடியிருப்பில் இருந்த மற்றொருவருக்கு பாலாஜி வீட்டை விற்றுவிட, தன்னிடம் சொல்லாமல் வீட்டை விற்றதை ஏற்க முடியாது என்றும், யாரையும் வீட்டுக்குள அனுமதிக்க மாட்டேன் என்றும், 25 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே வீட்டை காலி செய்வதாகவும் சக்திவேல் மிரட்டியதாக பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தபோதும், திமுக வட்டச் செயலாளர் என்னும் பதவியைக் கொண்டு வீட்டை ஆக்கிரமித்து, மிரட்டலில் ஈடுபடும் சக்திவேல், தியாகராயநகர் எம்.எல்.ஏ கருணாநிதி, மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேலு ஆகியோரிடம் நெருக்கம் காட்டுவதால், போலீசார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகச் சொல்லப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலே அடுத்தவரின் சொத்தை ஆட்டையை போடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளது மீண்டும்
உறுதியாகியுள்ளது.