விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து, விழுப்புரம் டவுன் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யான அறிக்கை என்றும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு செயல்படுகிறவர் மு.க.ஸ்டாலின் என்றும் குறிப்பிட்டார். சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பதற்காக கொள்கையை மாற்றிக் கொள்பவர் எனவும் நிறம் மாறும் பச்சோந்தி ஸ்டாலின் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா, தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் அவரது மனைவி புகார் மனு கொடுத்திருப்பதாக தகவல் வந்துள்ளதாக முதலமைச்சர் கூறினார். தேர்தல் முடிந்த பிறகு, அந்த மனு மீது சட்ட ரீதியாக விசாரித்து குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.