நேரடி அரசியலில் வெற்றி பெற முடியாதவர்கள், மறைமுக அரசியலில் ஈடுபடுவதாக, ஸ்டாலின், டிடிவி தினகரன் சந்தித்ததாக வெளியான செய்தி குறித்து, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளி மாணவ மாணவிகள், 12 ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்ற போது பெற்ற மருத்துவ கல்வி இடத்தை விட, நீட் தேர்வின் மூலம் கூடுதலாக பெறுவார்கள் என்று கூறினார். ஸ்டாலின், டிடிவி தினகரன் சந்திப்பு பற்றி வெளியான செய்தி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அரசியலில், வெளியில் ஒரு மாதிரியாகவும், உள்ளே ஒரு மாதிரியாகவும் இருப்பது புதிதல்ல என்றும், சந்திப்பில் தவறில்லை என்றும் தெரிவித்தார். நேரடி அரசியலில் வெற்றி பெற முடியாதவர்கள், மறைமுக அரசியலில் ஈடுபடுவதாகவே எண்ணுவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
Discussion about this post