பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாதுகாவலரான மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலையில் சொத்துக்காக அச்சுறுத்தலை சந்தித்து வந்த தாய் தந்தையை இழந்த 3 குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாதுகாவலராகியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் குப்பநத்தம் கிராமத்தில் 11 வகுப்பு படித்து வரும் சுஜாதா மற்றும் இவரது தம்பி, தங்கை ஆகிய மூவரும் தாய் தந்தையரை இழந்து வாழ்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே சொத்து பிரச்சினை தொடர்பாக இவர்களுக்கு உறவினர்களால் அச்சுருத்தல் இருந்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறப்பட்டது.

மனுவை ஏற்று பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்ட மூவரும் மைனர் என்பதால் அவர்கள் மேஜர் ஆகும் வரை அவருக்கு பாதுகாவலராக மாவட்ட ஆட்சியரே இருப்பார் என பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version