பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெல்லை மாவட்டம், தென்காசி அருகே உள்ள பாவூர்ச்சத்திரம் பகுதிகளில், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.

திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையில் அமைந்துள்ள பாவூர்சத்திரம் பகுதியில், ஆக்கிரமிப்பு கடைகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அளவிட்டு உடனடியாக அகற்றும் படி சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பை கடைக்காரர்கள் அப்புறப்படுத்ததால், தென்காசி உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் மேற்பார்வையில், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. திருநெல்வேலி பிரதான சாலை, கடையம் சாலை, சுரண்டை சாலையில் உள்ள கடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

Exit mobile version