திருவேற்காடு அருகே, கூவம் நதிக்கரை மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் குடியிருப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் கூவம் நதிக் கரையோரம் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்தன. இந்த நிலையில், கூவம் நதிக்கரை மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் குடியிருப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
நீதிமன்ற உத்தரவின்படி, பூந்தமல்லி தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் 33 ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதன் மதிப்பு 15 கோடி ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அப்புறப்படுத்தப்பட்ட 8 வீடுகளின் உரிமையாளர்களுக்கு பெரும்பாக்கத்தில் அரசு குடியிருப்பில் மாற்று இடம் கொடுக்கப்பட்டது.