நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும் செலீனியம் நானோ துகள்களை இயற்கை முறையில் கண்டுபிடித்து திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை பேராசிரியராக இருப்பவர் முனைவர் ராஜன். இவரிடம் ஆராய்ச்சி மாணவர்களாக ஆனந்த் மற்றும் கீர்த்திகா ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர். பேராசிரியர் ராஜன் வழிகாட்டுதலின்படி மனித
உடலில் உள்ள செலீனியம் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதில் சோடியம் செலீனைட்டையும், வைட்டமின் சியையும், இணைத்து முதன்முறையாக செலீனியம் நானோ துகள்களை உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முனைவர் ராஜன், இந்த கண்டுபிடிப்பு மூலம் ரசாயன மருந்துகளை தவிர்த்து இயற்கை முறையிலான நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தர முடியும் என கூறினார்.