ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் 2 ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி, மற்றும் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார்.திண்டுக்கல்லில், பொது மக்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், 65 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் கட்டும் பணி மற்றும் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமந்தன் நகர் பகுதியில் மேம்பாலம் கட்டுமானபணிகள் தொடர்பாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது பொதுமக்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பொது மக்களுக்கு எந்தவித பாதிப்புமின்றி, கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

Exit mobile version