இஞ்சி ஹேர் மாஸ்க் பற்றி தெரியுமா ?

நாம் அன்றாட உண்ணும் உணவில் இஞ்சி இல்லாத உணவே இல்லை.இஞ்சி மருத்துவ குணம் வாய்ந்தவை.சமையலில் மட்டும் பயன்படுத்துவது இல்லாமல் தலையில் உள்ள பல பிரச்சனையை போக்க இஞ்சி சாறினை பயன்படுத்த அசத்தலான டிப்ஸ்.வெப்பச்சலனம் காரணமாக தலையில் சில பேருக்கு அதிக பொடுகு பிரச்சனை ஏற்படும்.அப்படி பொடுகினால் அவஸ்தை பட்டு வருபவர்கள் இந்த இஞ்சி ஹேர் மாஸ்கினை தொடர்ந்து செய்யுங்கள்.

1.இஞ்சியை பொடியாக துருவி வைத்துக்கொள்ளவேண்டும்.

2. இஞ்சி பொடியை தண்ணீரில் தூவி நன்றாக கொதிக்க விடவும்.தண்ணீரின் நிறம் மஞ்சலாக மாறும் வரை கொதிக்க வையுங்கள்.

3.பின்பு,தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

4.சூடு தனிந்த பின் brush-ஐ பயன்படுத்தி தலைமுடியில் தடவலாம் அல்லது hair spray பாட்டிலில் இந்த தண்ணீரை நிரப்பி.தலையின் உச்சி முதல் பாதம் வரை அப்ளே செய்ய வேண்டும்.

5.ஒரு மணி நேரம் கழித்து தலையை ஷாம்பூ பயன்படுத்தி அலச வேண்டும்.இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உங்களில் தலையில் உள்ள பொடுகு பிரச்சனைகளால் குறைவதை கண்கூடாக காணலாம்.

Exit mobile version