மு.க. ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் மேகேதாட்டு குறித்து பேசினாரா ? – தமிழிசை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த போது, மேகேதாட்டு அணை விவகாரம் பற்றி மு.க. ஸ்டாலின் பேசினாரா என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக – காங்கிரஸ் ஒரு தோல்வியடைந்த கூட்டணி என விமர்சித்தார்.

பாஜக விவசாயிகளுக்கு எதிரான கட்சி என்று, மக்களிடையே தவறாக சித்தரிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், மு.க. ஸ்டாலினும், திருநாவுக்கரசரும் சேர்ந்து, கர்நாடகா சென்று மேகேதாட்டு அணை பற்றி ஏன் பேசவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

 

Exit mobile version