கிசான் முறைகேடு – 62 பேரை பணியிட மாற்றம் செய்து மதுரை ஆட்சியர் அதிரடி

மதுரை மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய 62 பணியாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேடு கண்டறிந்து, இதுவரை 4,232 வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 800 பேரின் பெயரும் மதுரை மாவட்டத்தின் கிசான் உதவித் தொகையில் சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

திருமங்கலம், சேடபட்டி, உசிலம்பட்டி, கள்ளிக்குடி ஆகிய பகுதிகளில் 100 நாள் வேலை பணியாளர்கள் பெயரில் உதவிதொகை பெறப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 62 அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version