'தில்லுக்கு துட்டு 2' படத்தின் டீஸர் வெளியீடு

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்த மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. இப்படம் நகைச்சுவைக் கலந்த பேய் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டு 2’ வெளிவரவுள்ளது. சந்தானம் தான் இதிலும் கதாநாயகனாக நடிக்கிறார்.

முதல் பாகத்தைவிட இரண்டு மடங்கு நகைச்சுவையோடு எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் நகைச்சுவை கலந்த காமெடி படமாக மட்டுமல்லாமல் பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டுள்ளது என நடிகை ஷிர்த்தா சிவதாஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் ‘தில்லுக்கு துட்டு 2’ டீஸர் இன்று வெளியானது. எப்போதும் போலும் நடிகர் சந்தானம் “டைமிங் காமெடி”யில் கலக்கி உள்ளார். இந்த டீஸர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version