41 ஆண்டுகள் கழித்து தாயை சந்தித்த டென்மார்க் மகன்

41 ஆண்டுகளுக்கு பிறகு டென்மார்க்கில் இருந்து வந்தவர், பெற்ற தாயை சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சி சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.

திருமுல்லைவாயில், டேவிட் நெல்சன் என்பவர் 2 வயதாக இருந்த போது, குடும்ப ஏழ்மை காரணமாக பெற்ற தாய்க்கு தெரியாமல் குழந்தை நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். குழந்தை நல காப்பகத்தில் இருந்த டேவிட் நெல்சனை டென்மார்க் சேர்ந்த தம்பதி, தத்தெடுத்து அழைத்துச் சென்றனர். இளம் வயதில் விவரம் அறிந்த நெல்சன் தனது தாயை பார்க்க ஆசைப்பட்டார். தாயாருடன் இருந்த கருப்பு வெள்ளை படங்கள் வைத்திருந்த டேவிட் நெல்சன், பெற்றோரை சந்திக்க விரும்பினார்.

சென்னையில் இருந்த நண்பர்கள் உதவியுடன் 41 ஆண்டுகளுக்கு பிறகு தனது தாய் தனலட்சுமியை அவர் கண்டுபிடித்துள்ளார். இந்தச் சம்பவம் அனைவரது மனதையும் நெகிழச் செய்துள்ளது.

Exit mobile version