ஆந்திராவின் கிருஷ்ணா நதிக் கரையில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கட்டிய பிரஜா வேதிகா கட்டடத்தை இடிக்கும் பணி துவங்கியுள்ளது.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் வீடு கிருஷ்ணா நதிக் கரையில் உண்டவல்லி என்ற இடத்தில் அமைந்துள்ளது. தனது வீட்டின் அருகே 8 கோடி ரூபாய் செலவில் பிரஜா வேதிகா என்ற கூட்ட அரங்கை சந்திர பாபு நாயுடு கட்டினார். ஆனால் சுற்றுச்சூழல் துறை மற்றும் உள்ளாட்சித் துறையின் அனுமதி வாங்காமல் நதிக்கரையில் இதுபோன்ற கட்டிடத்தை கட்டுவதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இந்தநிலையில் ஆந்திர சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்ற ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டு வருகிறது.