டெல்லியில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் 2019 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 1,176 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு நாளும் 6 பலாத்கார வழக்குகள், 8 பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளதாக டெல்லி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு சார்பில் பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக கடும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதிலும், குற்றங்கள் குறையாத நிலையே தொடர்வதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.