டெல்லியில் புகை-பனி மூட்டத்தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளிக்கும் நிலையில், பனிப்பொழிவும் அதிகரித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள், பட்டாசு வெடிப்பதற்கு தடை என பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும், காற்றுமாசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், பனிப்பொழிவும் அதிகரித்துள்ளதால், வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன.

நடைபயிற்சி செய்வோர் உள்ளிட்ட இயல்பு வாழ்க்கை கடும்பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. பொருளாதாரம், நாகரீகம் என வளர்ச்சி அடைந்தாலும், காற்று மாசை தவிர்க்க முடியாமல், டெல்லி விழிபிதுங்கி நிற்கிறது.

Exit mobile version