டெல்லி சட்டசபையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சட்டசபையில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கும், தனது மனைவி மற்றும் தனது மொத்த அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் பிறப்பு சான்றிதழ் இல்லை என கூறினார். மேலும், பிறப்பு சான்றிதழ் வைத்திருக்கும் எம்.எல்.ஏக்கள் கைகளை உயர்த்துமாறு அவர் கேட்டுக்கொண்டபோது, 9 பேர் மட்டுமே கைகளை உயர்த்தினர். இந்தச்சூழ்நிலையில், குடியுரிமையை அவர்கள் எவ்வாறு நிரூபிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு கைவிடுமாறு அறிவுறுத்தினார். மத்திய அமைச்சர்கள் தங்களது பிறப்பு சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.