பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் புதிய வகை ஜெல்லி மீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீர்மூழ்கி கப்பல் மூலம் பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அப்போது பூச்சாடி போன்று தோற்றம் கொண்ட புதியவகை ஜெல்லிமீனைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.
மற்ற ஜெல்லி மீன்களை போல குடைபோன்று தோற்றம் இல்லாமல் இருந்தது. சிறிது நேரத்தில் கூம்பு வடிவில் இருந்த ஜெல்லி மீனின் தோற்றம் பாலித்தீன் தாள் போன்று மாற்றம் பெற்றது. ஜெல்லி மீனின் இத்தகைய உருமாற்றம் அதன் எதிரிகளிடம் இருந்து அதனைக் காப்பாற்றிக் கொள்ள உதவும் என்று கடலடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.