எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது ? உச்சநீதிமன்றம் ஆணை..

பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட மாநிலங்களில், ஜூலை 31 ஆம் தேதிக்குள் + 2 மதிப்பெண்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்ட மாநிலங்களில் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது என்பது குறித்து 10 நாட்களில் தெரிவிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.அதேபோல ஜூலை 31ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வழக்கறிஞர் அனுபா சஹாய் ஸ்ரீனிவஸ்தா என்பவர் தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மதிப்பெண்களை கணக்கிட நாடு முழுவதும் ஒரே மாதிரியான முறையை பின்பற்ற உத்தரவிட முடியாது என்றும் கூறியுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கல்வி வாரியமும் மாறுபட்டது மற்றும் தன்னாட்சி அதிகாரம் கொண்டது என்பதையும் உச்சநீதிமன்றம் விளக்கியுள்ளது. 

Exit mobile version