பள்ளிகளில் தேர்தல் கல்வியறிவு மன்றம் அமைக்க முடிவு: சத்யபிரதா சாகு

தேர்தல் நடைமுறை தொடர்பாக மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிகளில் தேர்தல் கல்வியறிவு மன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

உலகில் நடைபெறும் தேர்தல்களில் மிகப் பெரிய தேர்தல் நடைமுறையாக இந்திய தேர்தல் நடைமுறை உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 89 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எனினும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 67 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவானது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் தேர்தல் கல்வியறிவு மன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் இதுதொடர்பாக மாநில அளவிலான பயிற்சி வகுப்புகள் கோவை, வேலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மையங்களில் நடக்க உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Exit mobile version