இளநிலை வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 6-ம்தேதி கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வழங்கும் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, ஜூன் 6-ந் தேதி கடைசி நாள் என, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் என்.குமார் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் உள்ள தனியார் வேளாண்மைக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பூரில் வேளாண்மை அறிவியல் நிலையம் தொடங்கியுள்ளது போல், இந்தாண்டு நீலகிரியில் தொடங்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

Exit mobile version