உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மால்பாஸ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி அவர் அதிகார பூர்வமாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இயங்கி வரும் உலக வங்கியில் இந்தியா உட்பட 189 நாடுகள் அங்கத்தினராக உள்ளன. இந்த வங்கியின் தலைவராக பதவி வகித்து வந்த ஜிம் யாங் கிம் கடந்த ஜனவரியில் பதவி விலகினார். இதையடுத்து உலக வங்கியின் புதிய தலைவராக டேவிட் மால்பாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது அமெரிக்க கருவூலத்துறையின் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் உலக வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் 73-வது அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.