நீலகிரி மாவட்டம் குன்னூரில் சீதாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
ஆங்கிலேயர்களால் நடவு செய்யப்பட்ட இந்த சீதாப்பழமானது பட்டர் ஆப்பிள் என்றும் கஸ்டர்டு ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது. குன்னூரில் சீதாப்பழத்தின் சீசன் தொடங்கியுள்ளதால் வணிகர்கள் விற்பனைக்காகக் குவித்து வைத்துள்ளனர். மருத்துவக் குணம் வாய்ந்த சீதாப்பழத்தைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ சீதாப்பழம் 90 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகளும், விற்பனையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.