ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த 1 கோடியே 48 லட்சம் பணம் பிடிபட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனை நடத்தியதில், வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1 கோடியே 48 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அதிகாரிகளை சிலர் தள்ளியதாக கூறப்பட்டது. இதனால் அமமுகவை சேர்ந்த செல்வம், பொன்முருகன், பழனி உள்ளிட்ட 150 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
பழனி, சுமன்ராஜ், பிரகாஷ்ராஜ், மது ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் செல்வம் என்பவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.