கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணய பரிவர்த்தனைகள் பணமோசடி தடுப்பு சட்டம் – 2002ன் கீழ் கொண்டுவரப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் பரிவர்த்தனையின் வாயிலாக பெறப்படும் தகவல்கள், எண்கள், டோக்கன், குறியீடுகள் ஆகியவை மெய்நிகர் சொத்துகளாக கருதப்படுகின்றன. பணமோசடி சட்டத்தின்கீழ் நடக்கும் பணப்பரிமாற்ற மோசடிகள் தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், கிரிப்டோகரன்சி, பரிவர்த்தனைகளும் பணமோசடி சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டு, மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.