குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் அன்பழகன்

அண்ணா பல்கலைகழக தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களிடம் மறுகூட்டலில் லஞ்சம் வாங்கிக் கொண்டு தேர்ச்சி அடைய செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதும் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இந்தநிலையில், பேராசிரியை உமா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து திண்டிவனம் பொறியியல் கல்லூரி இயக்குநர் விஜயக்குமார் மற்றம் கணித த்துறை பேராசிரியர் சிவக்குமாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, அண்ணா பல்கலைக் கழக மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version