கிரேஸி மோகன் திரையுலகிற்கு அளித்த பங்களிப்பு

உடல் நலக்குறைவாக் காலமான கிரேஸி மோகன் வசன கர்த்தாவாகவும், நடிகராவும் திரைவுலகிற்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து சுருக்கமாக பார்க்கலாம்…

1952ல் பிறந்த கிரேஸி மோகனின் இயற்பெயர் மோகன் ரங்காச்சாரி என்பதாகும். அடிப்படையில் இவர் ஒரு பொறியாளர், தனது ஈடுபாட்டால் நாடகம் மற்றும் திரைத்துறைக்கு வந்தவர். பொய்க்கால் குதிரை திரைப்படத்தில் வசன ஆசிரியராக அறிமுகமான இவர், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களில் பல வசன ஆசிரியராகப் பணியாற்றி உள்ளார்.

இந்தியன், அருணாச்சலம், அவ்வை சண்முகி, காதலா காதலா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். சாக்லேட் கிருஷ்ணா, மாது பிளஸ் 2, ஜூராசிக் பேபி உள்ளிட்ட பல மேடை நாடகங்களை எழுதி, நடித்துள்ளார். தனது கலைப் பணிகளுக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதையும் அவர் பெற்றுள்ளார்.

Exit mobile version