திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள அம்மணி அம்மாள் கோபுர தூணில் ஏற்பட்டுள்ள விரிசல் பழமையான முறையில் சரிசெய்யப்படும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்மணி அம்மாள் கோவில் மிகவும் பலமை வாய்ந்த கோவில் ஆகும், ஒன்பது கோபுரங்களை கொண்ட இந்த கோவிலில் அம்மணி அம்மன் கொடி மங்கை கற்தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தொல்லியல்துறை அதிகாரி வசந்தி, மற்றும் இந்து சமய அற நிலைய கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகாயணி ஆய்வு செய்தனர். இந்த விரிசல் ஆனது சிறிய அளவிலானது என்றும், இதனால் கோபுர அஸ்திவாரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். விரைவில் பழமையான முறையில் வெல்லம், கடுக்காய், சுண்ணாம்பு கொண்டு விரிசல் சரி செய்யப்படும் என்று அவர்கள் கூறினர்.