கோவாக்சின் பரிசோதனை இரண்டாம் கட்ட சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்!

இந்தியா தயாரித்த கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் இரண்டாம் கட்ட சோதனையிலும் பக்க விளைவுகள் இல்லாமல் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் எனப்படும் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நாடு முழுவதிலும் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவனைகளில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட கோவாக்சினின் முதற்கட்ட பரிசோதனை வெற்றியடைந்த நிலையில், இரண்டாம் கட்ட பரிசோதனை செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கியது.

சோதனை தொடங்கப்பட்டு 28 நாட்கள் ஆன நிலையில், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்க விளைவுகளின்றி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதால் இரண்டாம் கட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மூன்றாம் கட்ட சோதனை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Exit mobile version