மகாத்மா காந்தி நினைவு தினம்: டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவு

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி நாளை, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை அடைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 30-ம் தேதியான நாளை மகாத்மா காந்தியின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவிடக் கோரி கன்னியாகுமரியைச் சேர்ந்த ரதீஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், தமிழகம் முழுவதும் நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Exit mobile version