தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு- தயாநிதி, கலாநிதி உள்ளிட்ட 7 பேர் மீதான விசாரணை நவ. 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சட்ட விரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீதான சாட்சிகள் விசாரணையை நவம்பர் 2 தேதிக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தயாநிதி மாறன், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.

சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.  இதனையடுத்து, வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றஞ்சாட்டப்பட்ட பிரம்மநாதன், வேலுசாமி, வேதகிரி கவுதமன், கண்ணன் 4 பேர் சார்பில் கடந்த 2017 ஆண்டு தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகந்திரம் உள்ளது என்பதை , சிபிஐ தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதாகக் கூறி, அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது என உத்தரவிட்டதால், வழக்கை சிபிஐ நீதிமன்றம் திரும்பப்பெற்றது. இதனை தொடர்ந்து மாறன் சகோதரர்கள் உட்பட 5 பேர் விடுவிக்ககோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை 14-வது சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சிகள் விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து அவர் உத்தரவிட்டார்.

Exit mobile version