பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூன் 20முதல் தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 19ஆம் தேதி வெளியான நிலையில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு மே 2ம் தேதி முதல் மே 31ம் வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3ம் தேதி கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்கள் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஜூன் 20ம் தேதி துவங்குகிறது. அதைத்தொடர்ந்து 21ம் தேதி முன்னாள் வீரர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும், 22ம் தேதி விளையாட்டு பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி துவங்குகிறது. ஜூலை 30ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version