மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டத்தில் ஊழல்? -மூத்த பத்திரிக்கையாளர் சாய்நாத் குற்றசாட்டு

ரஃபேல் போர் விமான ஊழலை விட, மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளரும், வேளாண் ஆர்வலருமான சாய்நாத் குற்றம் சாட்டியுள்ளார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மூத்த பத்திரிகையாளரும், வேளாண் ஆர்வலருமான சாய்நாத்,பாஜக அரசின் கொள்கைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என்றார். பிரதமர் பீமா பசல் யோஜனா திட்டத்தில், ரஃபேல் போர் விமான கொள்முதல் ஊழலைக் காட்டிலும் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டினார். ரிலையன்ஸ், எஸ்ஸார் ஆகிய நிறுவனங்கள் சம்பாதிக்கும் வகையிலேயே இந்த காப்பீடு, அந்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சாய்நாத் கூறினார்.

இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு 30 கோடி ரூபாய் என்றால், எந்தவித முதலீடும் இல்லாமல் காப்பீடு நிறுவனத்துக்கு 143 கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.கார்ப்பரேட் நிறுவனங்களிடம், படிப்படியாக விவசாயத்தை இழந்து வருவதாகவும், இதனால் விவசாயிகள் வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

 

Exit mobile version