கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு எதிரொலியாக, அனைத்து பயணிகள் ரயில்களும் ஏப்ரல் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. முன்னதாக, வரும் 31ம் தேதி வரை ரயில்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லும் வகையில் சரக்கு ரயில்கள் இயங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல், கொரோனா பீதியால், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் அடுத்த கட்டமாக 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.