கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பிற ஐரோப்பிய நாடுகளுடனான எல்லைகள் மூடப்படுவதாக, பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தொலைக்காட்சியில் நேரலையில் பேசிய அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், 2 வாரங்களுக்கு எல்லைகள் மூடப்படும் என கூறினார். இருப்பினும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் நாடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேபோல், பாகிஸ்தானில் கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183ஆக உயர்ந்துள்ளது. தஃப்தான் பகுதியில் இருந்த வந்த நபர்களால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 183 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.