சட்டென்று மாறிய வானிலை! சென்னையில் மழை! நகரவாசிகள் மகிழ்ச்சி!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழையால் நகரவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக அக்னி நட்சத்திர கத்திரி வெயிலின் தாக்கத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். கடந்த நான்காம் தேதி அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் குறையாத வண்ணமே இருந்தன. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் கத்திரி வெயிலால் அவதியுற்று வந்த நகரவாசிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சென்னை பட்டினம்பாக்கம், எம் ஆர் சி நகர், அடையார், சைதாப்பேட்டை, கிண்டி, அசோக் நகர், வடபழனி சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Exit mobile version