சென்னை விமான நிலையத்தில் கட்டுமான பணி: பொதுமக்கள் நலனுக்காக பெரிய தடுப்புகள் அமைப்பு

நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக சென்னை விமான நிலையத்தின் சர்வதேச உள்நாட்டு முனைத்தில் பொதுமக்கள் நலன் கருதி மறைவான பெரிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை, விமான நிலையத்தில், 2012ம் ஆண்டு, பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. பயணிகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பழைய முனையங்கள் இடிக்கப்பட்டு, 2 ஆயிரத்து 467 கோடி ரூபாய் செலவில், புதிய ஒருங்கிணைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விமான ஓடுதளம் மிக அருகில் உள்ளதால், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் விமானங்களை கண்டுரசித்து செல்கின்றனர். பொதுமக்கள் கருதி நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, விமானங்களை பொதுமக்கள் பார்க்க முடியாத அளவிற்கு, மிக நீளமான தடுப்பு கம்பிகள் போடப்பட்டுள்ளது.

Exit mobile version