நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக திறந்த வெளி கிணறுகள் அமைக்கப்பட்டதற்கு, அப்பகுதி மக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பாவூர்சத்திரம் அடுத்த கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நீடித்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள், பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இந்தநிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு, முதலமைச்சர் சிறப்பு வளர்ச்சி நிதியில் இருந்து இரண்டு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில், 7 திறந்தவெளி கிணறுகள் அமைக்க திட்டம் வகுத்தது. முழு வீச்சில் நடைபெற்று வந்த கிணறுகள் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. குடி நீர் தட்டுப்பாடு குறையும் என்பதால், கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.