வீரமாமுனிவரின் பிறந்தநாளை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள்

மதுரை மாவட்டம் மேலூரில் வீரமாமுனிவரின் பிறந்த நாள் விழா பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. வீரமாமுனிவரின் பிறந்த நாளைத் தமிழ் நாள் விழாவாகத் தமிழக அரசு கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் கோசா குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் வீரமாமுனிவரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தியதுடன், பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான காட்சிகளைப் பார்வைக்கு வைத்திருந்தனர்.

மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டதாகப் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Exit mobile version