காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன நாள் விழா: தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன நாள் விழாவை ஒட்டி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன நாள் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மணிசங்கர் அய்யர், அசோக் கெலாட், அகமது பட்டேல், ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.

Exit mobile version