பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்த காங்கிரஸ் அமைச்சர்

பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்ததற்காக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் மீது நடவடிக்கை தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பி உள்ளது.

சோபா என்ற கட்டுமான நிறுவனம், அரசு பணத்தை சிவக்குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்காக பெற்று தந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.இதில், சிவக்குமார் 2018 ம் ஆண்டு தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியதும், வருமானம் வரும் ஆதாயத்தை மறைத்ததும் தெரிய வந்தது. இந்நிலையில், சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சிவக்குமார் மீதான இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், அவர் தகுதிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் அமைச்சரான சிவக்குமார் மீது ஏற்கனவே ஹவாலா பண மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version