ரூ. 500, ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் – பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க கோரி காங். நாளை தர்ணா

ரூபாய் நோட்டு வாபஸ் அமல்படுத்தப்பட்ட தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கும் வகையில், நாடு முழுவதும் நாளை தர்ணா போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் பொருளாதார அளவில் இந்தியா மிகப்பெரிய பின்னடைவை சந்தித்ததாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து, நாளையுடன் இரண்டாண்டுகள் நிறைவடைகிறது. இந்தநிலையில், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கவும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Exit mobile version