எடப்பாடியில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

தமிழக அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட கடைகளில் அரசால் தடை செய்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள் இருக்கிறதா? என்பது குறித்து நகராட்சி திட்ட அமலாக்கப் பிரிவு அலுவலர் பிரசாத் தலைமையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்காரர்களுகு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Exit mobile version