சென்னையில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நபரிடம் இருந்து ரூ.50 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

சென்னையில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நபரிடம் இருந்து 50 லட்சம் எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் கள்ள நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். ஆய்வாளர் ராஜேஷ்வரி தலைமையிலான தனிப்படையினர் சோதனை செய்தனர். அப்பொழுது 50 லட்சம் எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை செய்த மலையரசன் என்பவரை போலீசார் கைது செய்துனர். அவரிடம் இருந்து 2 ஆயிரம், 500 மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் கள்ள நோட்டுகளை அளித்த நபர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Exit mobile version