இந்தியா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட சட்ட படிப்பிற்கான உலக கருத்தரங்கு மாநாடு சீனாவில் நடைபெற்றது.
2019-ம் ஆண்டின் சட்ட படிப்பிற்கான மாபெரும் உலக கருத்தரங்கு மாநாடு சீனாவின், ஷாங்காய் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட ஆசிய, பசுபிக் நாடுகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட சட்ட பல்கலைகழக முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், சட்டத்துறை நிலைப்பாடு குறித்தும் கல்வி முறைக்கான நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில் சட்டத்தின் பங்கு என்ன, அதன் விதிகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் இருந்து பாரத் பல்கலைக்கழக சட்ட கல்லூரி சார்பில் அதன் முதல்வர் கஜேந்திர ராஜ் கலந்து கொண்டார்.