தேனியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் குடி மராமத்து பணிகள் அனைத்து இரண்டு மாத கலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் குடி மராமத்து பணிகள் குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், முதலமைச்சரின் உத்தரவு படி 30 குளங்கள் புனரமைக்கப்பட உள்ளதாக கூறினார். இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பு இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தப் பணிகள் அனைத்து, பொதுப்பணி துறையினரால் கண்காணிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதில், அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.