ஈஸ்டர் தின தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு இலங்கையில் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொலன்னறுவை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சிறிசேனா, எந்தவொரு காலத்திலும் இல்லாத வகையில் இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இலங்கையில் அமைதியான சூழல் கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையில், வளர்ச்சி திட்டங்களை துரிதமாகவும் பலமாகவும் முன்னெடுப்பதே இலங்கையில் உள்ள ஒவ்வொருவரின் பொறுப்பு என்று தெரிவித்தார்.